
இந்தியாவில் திருமண சீசன் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் பல இதயங்கள் இணையும் விழாக்கள் நடந்துகொண்டிருக்க, பல வித்தியாசமான சம்பவங்களும் அரங்கேறுகின்றன.
டெல்லியில் நடந்த திருமண நிகழ்வில் எதிர்பாராத திருப்பமாக விழா மேடையிலேயே திருமணத்தைத் நிறுத்தியுள்ளார் மணமகன்.
ஜோடி படத்தில் ஒரு `பொய்யாவது சொல் கண்ணே’ பாடலைக் கேட்டு சிம்ரன் மனம் மாறியது போல, திருமணத்தில் டிஜே சன்னா மேரேயா என்ற எமோஷனலான பாடலைப் போட்டதால், தன் முன்னாள் காதலன் நினைவு வந்து அவர் திருமணத்தில் இருந்து பாதியிலேயே சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த விசித்திரமான நிகழ்வு பற்றிய பதிவுகள் இன்ஸ்டாகிராமில் வைரலானதால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சிலர் இந்த பாடல் மணமக்களின் வாழ்க்கையைக் காப்பாற்றியுள்ளது எனக் கூற, பலர் இந்த பாடல் எல்லா இந்திய திருமணங்களிலும் போடப்பட வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இந்த திருமணம் மற்றும் மணமக்கள் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகவில்லை.
Channa Mereya
சன்னா மேரேயா பாடல் ‘ஏ தில் ஹை முஷ்கில்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்றது. ரன்பீர் கபூர் மற்றும் அனுஷ்கா சர்மா நடித்த அந்த திரைப்படம் பாலிவுட்டில் மிகப் வெற்றியைப் பெற்றது.
அர்ஜீத் சிங் பாடிய இந்த பாடல் மொழிகளைத் தாண்டி அனைவராலும் ரசிக்கப்படுகிறது. முக்கியமாக வட இந்தியாவில் காதலர்களின் கீதமாக திகழ்ந்து வருகிறது.