• April 27, 2025
  • NewsEditor
  • 0

ஆஸ்கார் விருது வென்ற ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்செஸி, இந்திய சினிமா இயக்குநர் நீரஜ் கைவான் இயக்கிய ஹோம்பவுண்ட் திரைப்பட்டத்தில் நிர்வாக தயாரிப்பாளராக பங்களித்துள்ளார்.

நீரஜ் கைவானின் இரண்டாவது திரைப்படமான ஹோம்பவுண்ட், முதன்முதலாக அடுத்தமாதம் நடைபெறவிருக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.

Cannes

இயக்குநர் கரண் ஜோகர், தனது இஸ்டாகிராமில் ஹோம்பவுண்ட் திரைப்பட இயக்குநரைப் பாராட்டி எழுதியதுடன், மார்ட்டின் ஸ்கார்செஸியும் அவரைப் பாராட்டியதாகவும், ‘படத்திற்கு உதவி செய்ய தயார்’ எனக் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

“எனக்கு மசான் பிடித்திருந்தது”

மார்ட்டின் ஸ்கார்செஸி நீரஜ் கைவான் குறித்து, “2015ம் ஆண்டு நான் நீரஜின் மசான் திரைப்படம் பார்த்தேன், எனக்குப் பிடித்திருந்தது. அதனால் மெலிடா டோஸ்கன் டு பிளாண்டியர் ( Melita Toscan du Plantier ) தனது இரண்டாவது படத்தின் திட்டத்தை எனக்கு அனுப்பியபோது, ​​நான் ஆர்வமாக இருந்தேன்.

திரைப்படத்தின் கதையும் அதன் கலாச்சாரமும் என்னை மிகவும் ஈர்த்தது. அதனால் உதவுவதற்கு தயாராக இருந்தேன். நீராஜின் இந்த மிக அழகாக வடிவமைக்கப்பட்ட திரைப்படம் இந்திய சினிமாவுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பாக இருக்கும்.

Neeraj Ghaywan
Neeraj Ghaywan

இந்த வருடம் கேன்ஸில் Un Certain Regard பிரிவில் இந்தப்பட தேர்வு செய்யப்பட்டதில் மகிழ்ச்சி” எனக் கூறியுள்ளார்.

Martin Scorsese

இன்று சர்வதேச திரைப்பட உலகில் மிகச் சிறந்த இயக்குநராக பார்க்கப்படுகிறார் மார்டின் ஸ்கார்செஸி.

டாக்ஸி டிரைவர், குட்ஃபெல்லாஸ், ரேஜிங் புல் மற்றும் தி வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட் போன்ற சிறந்த திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

கடைசியாக அவர் இயக்கிய கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் திரைப்படம் 10 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

Homebound - Martin Scorsese
Homebound – Martin Scorsese

Homebound

முதன்முதலாக அவர் இணைந்துள்ள இந்திய திரைப்படம் ஹோம்பவுண்டில் இஷான் கட்டர், விஷால் ஜெத்வா மற்றும் ஜான்வி கபூர் நடித்துள்ளனர். நீரஜ் மற்றும் சுமித் ராய் இணைந்து எழுதியுள்ள இந்த திரைப்படத்தை கரண் ஜோகரின் தர்மா தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் மே 13 முதல் 25 வரை நடக்கவுள்ள கேன்ஸ் திரைப்படவிழாவில் திரையிடப்படவுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *