• April 27, 2025
  • NewsEditor
  • 0

கனடாவின் வான்கூவரில் லாபு லாபு விழா (Lapu Lapu Day street festival) நேற்று நடந்தது. இந்த விழாவில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். அப்போது இரவு 8 மணிக்கு மேல், திடீரென கூட்டத்துக்குள் SUV கார் ஒன்று நுழைந்தது. சரசரவென கூட்டத்தில் இருந்தவர்களை மோதிச் சென்றது.

இதில் பலர் உயிரிழந்தாக தெரிகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை, வாகனத்தை ஒட்டிவந்த இளைஞரை காவல்துறை கைது செய்திருக்கிறது.

இது தொடர்பாக கனேடிய பிரதமர் மார்க் கார்னி, “வான்கூவரில் லாபு லாபு விழாவில் நடந்த கொடூரமான நிகழ்வுகளைப் பற்றி கேள்விப்பட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன். கொல்லப்பட்டவர்களின் அன்புக்குரியவர்களுக்கும், பிலிப்பைன்ஸ் கனேடிய சமூகத்திற்கும், வான்கூவரில் உள்ள அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாங்கள் அனைவரும் உங்களுடன் துக்கப்படுகிறோம். நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

கனடா காவல்துறை, தன் எக்ஸ் பக்கத்தில், “இன்று E. 41-வது அவென்யூ, ஃப்ரேசரில் நடந்த விழாவில் கூட்டத்திற்குள் நுழைந்த கார் மோதி பலர் கொல்லப்பட்டனர். இன்னும் பலர் காயமடைந்தனர். ஓட்டுநர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். விசாரணை முடிவடையும் போது கூடுதல் தகவல்களை வழங்குவோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *