• April 27, 2025
  • NewsEditor
  • 0

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ந்து வார்த்தைப் போர் நடந்து வருகிறது.

இந்தியா மத்திய அமைச்சர்கள் பாகிஸ்தானை மிரட்டுவதும், பாகிஸ்தான் இந்தியாவை மிரட்டுவதும் தொடர்ந்து வருகிறது.

தற்போது பாகிஸ்தானின் அமைச்சர் ஹனீப் அப்பாஸி வதும் நடந்து வரும் பதற்றத்தில், “எங்கள் தளங்களில் நாங்கள் வைத்திருக்கும் ஷாஹீன் (ஏவுகணைகள்), கஸ்னவி (ஏவுகணைகள்) அணு ஆயுதங்களை இந்தியாவுக்காக வைத்திருக்கிறோம். எங்களிடம் உள்ள 130 அணு ஆயுதங்கள் வெறும் ஷோவுக்காக மட்டும் வைத்திருக்கவில்லை.

அமைச்சர் ஹனீப் அப்பாஸி

அந்த ஆயுதங்களை பாகிஸ்தானின் எந்தப் பகுதிகளில் நாங்கள் வைத்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாது. பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருப்பது இந்தியாவுக்குத் தெரியும். அதனால்தான் அவர்கள் பின்வாங்கி தங்கள் நாட்டைத் தாக்கவில்லை. சிந்து நீர் ஒப்பந்தத்தை தடுத்து பாகிஸ்தானின் நீர் விநியோகத்தை நிறுத்த இந்தியா துணிந்தால், முழு அளவிலான போருக்குத் இந்தியா தயாராக வேண்டும்.

முதலில், இந்தியா தன் செயல்களுக்கான பதில்களை கொடுக்க வேண்டும். எங்களை நோக்கி விரல் நீட்டுவதற்கு முன் உங்களை நீங்களே பொறுப்பேற்கச் செய்யுங்கள். இந்தியா முதலில் எங்களை அச்சுறுத்தியது என்று முழு நாட்டிற்கும் முழு உலகிற்கும் நான் சொல்ல விரும்புகிறேன்” என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *