
ராமேசுவரம்: ராமேசுவரத்தில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்தக் கடலில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து தீர்த்தமாடினர்.
அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்வதன் மூலம் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சித்திரை அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சனிக்கிழமை இரவிலிருந்தே ராமேசுவரம் வரத் தொடங்கினர்.