
ஶ்ரீவில்லிபுத்தூர்: தமிழகம் முழுவதும் உள்ள குவாரிகளில் விதிமீறி அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை வெட்டி எடுப்பதும், அரசு புறம்போக்கு நிலங்களில் சட்ட விரோதமாக கனிம வளங்களை எடுத்தல் உள்ளிட்ட அத்துமீறல்கள் அதிகாரிகள் துணையுடன் தொடர்ந்து வருவதாக, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் குற்றம்சாட்டினார்.
மதுரை – கொல்லம் நான்கு வழிச்சாலை பணிக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அச்சம்தவிர்த்தான் கிராமத்தில் கடந்த 2023-ம் ஆண்டு கல் குவாரி அமைக்கப்பட்டது. கல் குவாரியால் மேய்ச்சல் நிலம் மற்றும் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியவில்லை எனக்கூறி விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று காலை கல்குவாரியை பார்வையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.