
கோவை: இந்தியா பாகிஸ்தானுக்கு சரியான பாடத்தை கற்றுக்கொடுக்கும் என மகாராஷ்ட்ர மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது முதல் தற்போது வரை எவ்வித பாடமும் கற்றுக்கொள்ளாத நாடு ஒன்று உள்ளது என்றால் அது பாகிஸ்தான் தான். வங்கதேசத்தை இழந்தும் தற்போது வரை தீவிரவாதத்தை உற்பத்தி செய்யும் நாடாக உள்ளதே தவிர மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த எதுவும் செய்யவில்லை.