
புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் படி, பயங்கரவாதிகளால் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட பஹல்காம் தாக்குதல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) எடுத்துக்கொள்கிறது.
இதுகுறித்து என்ஐஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் படி, கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்.22) சுற்றுலாப்பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் வழக்கை தேசிய புலனாய்வு முகமை முறையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் நடைமுறையைத் தொடங்கியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்ள்ளது. ஏற்கனவே பஹல்காமில் இருந்து 5 கி.மீ. தள்ளியிருக்கும் பைரசன் புல்வெளியில் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ குழுவினர் புதன்கிழமை முதல் முகாமிட்டு தாக்குதலுக்கான ஆதாரங்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.