• April 27, 2025
  • NewsEditor
  • 0

இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பலர் நடித்திருக்கும் படம் `டூரிஸ்ட் ஃபேமிலி’ இந்தப் படத்தில் புரோமோஷன் பணிகள் நடந்துகொண்டிருக்கிறது.

சென்னையில் இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தன் தோழியிடம் காதலை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ வைரலாகிவருகிறது.

அந்த வீடியோவில், “இந்த நிகழ்ச்சியில் முக்கியமான ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அகிலா இளங்கோவன்.. சொல்ல வேண்டும் என்பதை விட அவரிடம் ஒன்று கேட்க வேண்டும். ஆறாம் வகுப்பிலிருந்து உன்னை எனக்குத் தெரியும். 10-ம் வகுப்பிலிருந்து நாம் நெருங்கிய நண்பர்களாக பழகிவருகிறோம். என்னை அக்டோபர் 31-ம் தேதி திருமணம் செய்துகொள்கிறாயா? I Love You so much.

நிறையமுறை நான் பலகீனமாக இருக்கும்போது அவர்தான் என்னுடன் இருந்தார். நான் இந்த நிலையில் இருப்பதற்கு என் அம்மா எவ்வளவு முக்கியமோ அதே அளவு இவரும் என்னுடன் இருந்திருக்கிறார்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *