• April 26, 2025
  • NewsEditor
  • 0

கோடைவெயில் காரணமாக வனப்பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் வெளியேறத் தொடங்கியுள்ளன. அதன்படி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை மற்றும் மலை கிராம பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

கொடைக்கானல்

கொடைக்கானல் மேல் மழை மன்னவனூர் வயல் பகுதியைச் சேர்ந்த ஜெயமணி இவரது மனைவி சுசீலா இவர்களதும் மகன் தரும் ஆகியோருடன் சேர்ந்து வெள்ளை பூண்டு நடும் பணி செய்து வந்தனர்.

இன்று பூண்டு நடும் பணி செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக இவர்களது தோட்டத்திற்கு அருகில் இருந்து காட்டுப்பன்றி ஒன்று தோட்டத்திற்கு புகுந்தது பன்றியை பார்த்து இவர்கள் விரட்ட முயன்றனர். அப்போது ஜெயமணி, சுசீலா அவர்களது மகன் ஆகிய மூவரையும் பன்றி தாக்கியதில் மூவரும் படுகாயம் அடைந்தனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்

படுகாயம் அடைந்த இவர்கள் மூவரையும் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

வனவிலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று மேல்மலை பகுதி விவசாயிகள் திடீரென்று சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *