
கோவை: “நாம் அரசியலுக்கு வந்துள்ளது மக்களுக்காகவும் மக்கள் நலனுக்காவும் மட்டும்தான். களத்தில் சென்று கலக்குங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். வெற்றி நிச்சயம்,” என்று கோவையில் நடந்த பூத் கமிட்டி முகவர்களுக்கான கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசினார்.
கோவை எஸ்.என்.எஸ் கல்லூரியில் தவெக பூத் கமிட்டி முகவர்களுக்கான இரண்டு நாட்கள் பயிற்சி பட்டறை இன்று (ஏப்.26) தொடங்கியது. இதில் கலந்துகொண்டு அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியது: “கோவையில் நடைபெறும் பூத் முகவர்களுக்கான பயிற்சி பட்டறை என்றாலே ஓட்டு தொடர்புடையது என நினைக்க வேண்டாம். ஓட்டு பெறுவது மட்டுமல்ல, நாம் ஆட்சிக்கு வந்தபின் என்ன செய்ய போகிறோம் என்பது குறித்தும் தெரிந்து கொள்வதற்குத்தான்.