• April 26, 2025
  • NewsEditor
  • 0

ஏழாவது தோல்வியுடன் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமான நிலையில் இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

சன்ரைசர்ஸ் அணியுடனான தோல்விக்குப் பிறகு அந்த ஆட்டம் குறித்தும் சி.எஸ்.கே எதிர்காலம் குறித்தும் பல விஷயங்களைப் பத்திரிகையாளர் சந்திப்பில் பகிர்ந்துகொண்டார் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்.

அவர் பேசிய சில முக்கிய விஷயங்கள் இதோ:

“இந்த ஆட்டம் எங்கள் சீசன் எப்படியானதாக இருந்தது என்பதைப் பிரதிபலிக்கிறது. இன்று பேட்டர்கள் பாசிட்டிவ் இன்டென்ட்டுடன் ஆட்டத்தைத் தொடங்கினார்கள் என நினைக்கிறேன்.

இருந்தும் முக்கியமான தருணங்களில் சில தவறுகளைச் செய்தோம். அவை வேகத்தைக் குறைத்துவிட்டன. பிரெவிஸ் சிறப்பாக ஆடினார். அவரது விக்கெட் முக்கிய திருப்புமுனை.

ஒரு சிறப்பான கேட்ச் எங்களை வீழ்த்திவிட்டது. இதற்கு முன்பும் இதே போல ரியான் பராக் ஒரு சிறப்பான கேட்ச்சைப் பிடித்து எங்களிடமிருந்து போட்டியைப் பறித்தார்.

இந்த போட்டியில் இரண்டு அணிகளுமே பதற்றத்துடனே ஆடியதாகப் பார்க்கிறேன். நாங்கள் பந்துவீச்சில் வாய்ப்புகளை உருவாக்கினோம். ஆனால், பேட்டிங்கில் சுமார் 25 ரன்கள் குறைவாக அடித்திருந்தோம். எதுவும் கைகூடவில்லை.

Ayush Mhatre

சில வாரங்களுக்கு முன்பு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் எரிச்சலில், ‘முடிவில் யார் சோபிக்கிறார்கள் என்பதை மட்டும் பாருங்கள்’ என எங்கள் அணி குறித்த கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்தேன்.

இப்போதும் எந்த அணிகள் இறுதிவரை சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்.

அந்த அணிகள் எந்த விஷயத்தைச் சரியாகச் செய்கின்றன என்பதைப் பார்ப்பேன். அதிலிருந்து நாங்களும் பாடம் கற்றுக்கொள்ள நினைக்கிறோம்.”

“ஏலத்தில் சரியாகச் செயல்படாததன் விளைவுதான் இது என இப்போது நினைக்கிறீர்களா?” என்ற கேள்விக்கு, “எங்கள் செயல்பாட்டைப் பார்க்கும்போது ஏலத்தில் சரியாகச் செயல்பட்டோமோ என்ற கேள்வி எழுவது சரியானது.

நாங்கள் ஆடும் விதத்தையும், ஆட்டம் எப்படியானதாக மாறிவருகிறது என்பதையும் ஆராய்ந்து அணியைத் தேர்வு செய்தோம். இதையேதான் மற்ற அணிகளும் ஏலத்தில் செய்தன. இப்போது அந்த அணிகள் முன்னேறியுள்ளன.

எங்களது நோக்கமும் அதுவாகத்தான் இருந்தது. அதற்கு முழு பொறுப்பேற்கிறேன். ஏலம் என்பது ஒரே நேரத்தில் 25 வீடுகளை வாங்குவது போலானது. மனரீதியாக, உடல்ரீதியாகவும் உங்களை மிகவும் சோர்வடையச் செய்யும்.

இப்போதும் எங்களிடம் நல்ல அணி இருப்பதாகவே நினைக்கிறேன். காயங்கள், ஃபார்ம் பிரச்னைகள், கைகூடாத யுக்திகள் என இந்த சீசனில் பின்னடைவுகள் அதிகம் இருந்தன.” என்றார்.

‘மீண்டும் தீபக் ஹூடா அணியில் எடுக்கப்பட்டது ஏன்?’ என்ற கேள்விக்கு, “விஜய் சங்கரை எந்த பொசிஷனிலும் ஆடும் பன்முக பேட்டராக பார்த்தோம். ஆனால், அவர் சிறந்த ஃபார்மில் இல்லை.

அவரிடமிருந்து எதிர்பார்த்த பர்ஃபாமன்ஸ் கிடைக்கவில்லை. களத்திற்கு வெளியே நெட்ஸ் மற்றும் பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாக ஆடுபவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க நினைக்கிறேன். அப்படித்தான் இன்று ஹூடாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.”

CSK fans
CSK fans

“எங்களுக்குக் கிடைக்கும் ஆதரவு குறித்து நன்கு அறிவேன். எங்குச் சென்றாலும் மஞ்சள் ஜெர்சியில் மக்கள் திரண்டு வருகிறார்கள். இது எங்களுக்கு மோசமான சீசன், இருந்தும் ரசிகர்கள் எங்களைக் கைவிடவில்லை.

அவர்களுக்காக மீதமிருக்கும் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட முயற்சி செய்வோம். சரியான அணியைக் கட்டமைப்பதிலும், எங்கள் யுக்திகளை மாற்றுவதற்கும் எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதைத் தவறவிட மாட்டோம்” என ரசிகர்களுக்கான மெசேஜையும் கூறிவிட்டு பத்திரிகையாளர் சந்திப்பிலிருந்து விடைபெற்றார் பிளெமிங்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *