• April 26, 2025
  • NewsEditor
  • 0

ஊட்டி: “2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம்’ என்பதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம். அதை அடைய கடினமாக உழைக்க வேண்டும்" என துணை வேந்தர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தினார். மேலும், “தமிழக பல்கலைக்கழகங்களின் ஒருங்கிணைப்புக்கு வித்திட்ட மாநாடு இது” என்று அவர் குறிப்பிட்டார்.

ஊட்டியில் துணை வேந்தர்கள் மாநாடு நேற்று (ஏப்.25) தொடங்கியது. குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மாநாட்டை தொடங்கி வைத்தார். இரண்டு நாள் நடைபெற்ற இந்த மாநாட்டில் 35 பல்கலைக்கழகம் சேர்ந்த துணை வேந்தர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இன்று (ஏப்.26) இந்த மாநாட்டிவ் நிறைவு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி ஆளுநர் பேசியது: “தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்கள் ஒருங்கிணைப்பு இல்லாமல் இருந்தன. துணை வேந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாமல் இருந்தனர். தற்போது இந்த மாநாடு வாயிலாக ஒருங்கிணைப்பு ஏற்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *