
ஆண்டுதோறும் நம்பிக்கை விதைக்கும் ஆளுமைகளைக் கொண்டாடும் நம் விகடனின் 2024-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் `நம்பிக்கை விருதுகள்’ விழா, இன்று (ஏப்ரல் 26) மாலை சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது.
இதில், அன்றாட வாழ்வுரிமைக்காக அலுவலகங்களுக்கு அலைவது தொடங்கி, கொத்தடிமைகளாக இருந்து வதைபடும் அப்பாவிகளை மீட்பது வரை அயராது பழங்குடி மக்களுக்காகப் பணியாற்றிவரும் ‘தனராஜ்-லீலாவதி’ இணையருக்கு ‘பூர்வகுடிகளின் நேசர்கள்’ என டாப் 10 மனிதர்கள் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை வழங்கினார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
`உங்கள் வாழ்க்கையின் நம்பிக்கை மனிதர் யார்?’
`இயக்குநர் ராம்.’
`உங்கள் வாழ்க்கையின் நம்பிக்கை இளைஞர் யார்?’
`என் மகன். என் குழந்தைகளை எப்படி வளர்ந்து, இந்த சமூகத்துக்கான முக்கியமான மனிதர்களாக மாறினால் நான் சரியாக இருந்திருக்கிறேன் என்று மகிழ்ச்சியடைவேன்.’
`உங்கள் வாழ்க்கையின் நம்பிக்கை மனிதர்கள்?’
`எனக்கு நம்பிக்கை விதைத்த மனிதர்களை என் வாழ்வில் தினமும் பார்த்திருக்கிறேன். அவர்களின் பெயர்கள் தெரியாது. அவர்கள் அன்பை, நம்பிக்கையை எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். நான் செயல்பட உந்து சக்தியாக இருக்கிறார்கள். அவர்கள்தான் எனக்கான நம்பிக்கை மனிதர்கள்.’
`உங்கள் வாழ்க்கையின் நம்பிக்கை இளைஞர்கள்?’
`சில இளைஞர்கள் சமூக மாற்றத்துக்காக உரையாட ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த இளைஞர்கள்தான் எனக்கான நம்பிக்கை இளைஞர்கள்.’

‘பைசன்’, தனுஷ் பட அப்டேட்..?
“ `பைசன்’ முடிந்துவிட்டது. நானும் தனுஷ் சாரும் இணைந்து அடுத்து படம் பண்றோம். எளிமையான கதையைப் பெருசா பண்ணப்போறேன். அதற்கான வேலையைத்தான் அடுத்து ஆரம்பிக்கப்போறேன்.”
விகடன் நம்பிக்கை விருது விழாவின் முழுமையான தொகுப்பு கீழே இருக்கும் லிங்க்கில்…!