
சென்னை: “சமூக நீதி,நேர்மை, துணிவு ஆகியவற்றை மனதில் வைத்துக் கொண்டு, ஏழை எளிய மக்களுடைய உயர்வுக்காகப் பாடுபடுங்கள். இந்த மூன்றையும் மனதில் வைத்துக் கொண்டு பணியாற்றினால், மக்கள் நிச்சயமாக நம்மை மறக்கமாட்டார்கள்” என்று யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சென்னை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியல் நடைபெற்ற ‘நான் முதல்வன்’ திட்டம் மற்றும் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா தமிழக முல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஏப்.26) நடைபெற்றது. விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ள உங்கள் எல்லோரையும் நான் முதலில் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன். உங்கள் எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.