
‘இட்லி கடை’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று இருக்கிறது. தற்போது இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக தொடங்கப்படவுள்ளன. தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இட்லி கடை’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு பாங்காக்கில் தொடங்கப்பட்டது. இதில் தனுஷ், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய் உள்ளிட்டோர் அடங்கிய முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது. பாங்காக் படப்பிடிப்பு முடிவடைந்ததை முன்னிட்டு, ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி வரும் படம் ‘இட்லி கடை’. தனுஷ், ராஜ்கிரண், சத்யராஜ், அருண் விஜய், நித்யா மேனன், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்தினை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடவுள்ளது. அக்டோபர் 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு.