• April 26, 2025
  • NewsEditor
  • 0

விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் தற்போது லண்டனில் வசித்து வருகின்றனர். ஆடம்பரம் மற்றும் ஆரவாரங்களில் இருந்து விலகி அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

கடந்தாண்டு இந்தியாவை விட்டு லண்டனில் விராட் – அனுஷ்கா தம்பதி குடிபெயர்ந்தனர். வேலை நிமிர்த்தமாக இந்தியாவிற்கு வருகை தருகின்றனர்.

தங்களின் அதிகமான நாள்களை லண்டனில் செலவிட்ட தம்பதி தற்போது அங்கேயே குடிபெயர்ந்து உள்ளனர்.

அனுஷ்காவும் விராட் கோலியும் லண்டனில் குடி பெயர்ந்ததற்கான உண்மையான காரணங்கள் வெளிவந்துள்ளன.

நடிகை மாதுரி தீட்சித்தின் கணவர் டாக்டர் ஸ்ரீராம் நேனே youtube சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் சமீபத்தில் யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியாயை தனது பாட்காஸ்டில் பேச வைத்தார். அப்போது இருவரும் விராட் கோலி மீதான அபிமானத்தை பகிர்ந்து கொண்டனர்.

அவர்களின் உரையாடலின் போது டாக்டர் ஸ்ரீராம் நேனே அனுஷ்காவுடனான தனது உரையாடலை நினைவு கூர்ந்தார்.

ஒரு நாள் அனுஷ்காவுடன் உரையாடினேன். அது மிகவும் சுவாரஸ்சியமாக இருந்தது. அவர்கள் லண்டனுக்கு செல்வது பற்றி யோசித்துக் கொண்டிருந்தார்கள்.

அனுஷ்கா இது குறித்து கூறும்போது, “தங்களால் ஒரு வெற்றியை கூட அனுபவிக்க முடியவில்லை, எது செய்தாலும் அது கவனம் ஈர்க்கப்படுகிறது. நாங்கள் கிட்டத்தட்ட தனிமைப்படுத்தப்படுகிறோம்.

எங்கு சென்றாலும் செல்பி கேட்கிறார்கள், நாங்கள் உணவு சாப்பிட செல்லும் இடத்தில் கூட அவ்வாறு போட்டோ கேட்கிறார்கள். எங்களது குழந்தைகளை சாதாரணமாக வளர்க்க விரும்புகிறோம்” என்று அனுஷ்கா கூறியதாக டாக்டர் ஸ்ரீராம் கூறினார்.

தங்கள் குழந்தைகளை அனைத்து ஆடம்பரங்களில் இருந்தும் கவர்ச்சியிலிருந்தும் விலக்கி வளர்க்க விரும்புவதால் லண்டனுக்கு குடிபெயரப்போவதாக அனுஷ்கா கூறியதாக டாக்டர் ஸ்ரீராம் நேனே கூறினார்.

விராட் கோலி- அனுஷ்கா

அனுஷ்கா சர்மாவும் விராட் கோலியும் முதன்முதலில் 2013 ஆம் ஆண்டு ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தின் படப்பிடிப்பின் போது சந்தித்தனர். அதன் பின்னர் ஒருவரையொருவர் காதலித்தனர்.

2017 ஆம் ஆண்டு அனுஷ்கா சர்மாவும் விராட் கோலியும் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடி ஜனவரி 2021-ல் பெண் குழந்தையைப் பெற்று, அதற்கு வாமிகா என்று பெயரிட்டனர். பின்னர் பிப்ரவரி 2024 -ல், ஒரு ஆண் குழந்தை பிறந்ததும் குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *