• April 26, 2025
  • NewsEditor
  • 0

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 3 பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 7 பேர் காயமடைந்தனர்.

சிவகாசி சிறுகுளம் காலணியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 57) மற்றும் பூத்தாயம்மாள் நகரை சேர்ந்த ரவீந்திரன் என்பவரின் மனைவி ராஜரத்தினம் (56) ஆகியோர் எம்.புதுப்பட்டி அருகே நெடுங்குளத்தில் ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்தவர்

மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை (பெசோ) உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 80-க்கும் மேற்பட்ட அறைகளில், 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அறை எண்:14-ல் பட்டாசுக்கு ரசாயன கலவை செலுத்தும் பணியின்போது உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த அறைகளுக்கும் தீ பரவி பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கியது. இதனால் ஆலையில் பட்டாசு உற்பத்தி பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.

இதைத்தொடர்ந்து, வெடிவிபத்து குறித்து சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு படையினர் பட்டாசு ஆலையில் பரவிய தீயை அணைத்து இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.

உயிரிழந்தவர்

இந்த வெடிவிபத்தில் சிக்கி எம்.சொக்கலிங்காபுரத்தை சேர்ந்த விஜயகுமார் மனைவி கலைச்செல்வி(33), சொக்கம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மனைவி மாரியம்மாள்(51), கூமாபட்டியை சேர்ந்த ராமர் மனைவி திருவாய்மொழி(45) ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் கட்டிட இடிபாடுகள் மற்றும் தீ விபத்தில் சிக்கி கூமாபட்டியை சேர்ந்த கோமதி(55), ராபியா பீவி(50), பாத்திமாமுத்து(65), கோபாலன்பட்டி முனியம்மாள்(50), எம்.புதுப்பட்டியை சேர்ந்த பாக்கியலட்சுமி(55) உள்பட 7 பேர் காயமடைந்தனர்.

வெடிவிபத்து

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து எம்.புதுப்பட்டி காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்” என்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *