• April 26, 2025
  • NewsEditor
  • 0

ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பைப் போட்டு இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் தகுதிப்பெற்றிருக்கிறது.

இந்த நிலையில், ‘பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாடாது’ என பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் குல் ஃபெரோசா தெரிவித்திருக்கிறார்.

Gull Feroza

இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், “நாங்கள் ஆசிய அளவில் விளையாடுவோம் என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் நாங்கள் இந்தியாவில் விளையாடப்போவதில்லை. இதை தெளிவாக கூறுகிறோம். இந்தியாவில் விளையாடுவதில் எங்களுக்கும் ஆர்வம் இல்லை. இலங்கை துபாய் என எங்கு விளையாடினாலும் ஆசியாவில் நீங்கள் பெறும் தகுதிகளைப் போலவே அதுவும். தகுதிச் சுற்றுகள் சொந்த ஊரில் இருந்தன” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் தொடக்க வீராங்கனையாக மூன்று ஆட்டங்களில் பங்கேற்ற ஃபெரோசா, பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்பாக நடந்த விவாதங்கள் தொடர்ந்த நிலையில் இந்த பதில் வந்திருக்கிறது.

மோஷின் நக்வி

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் மொஹ்சின் நக்வி ஏற்கெனவே உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் டீம் இந்தியாவுக்கு வராது எனக் கூறி இந்தியாவுக்கு பயணம் செய்யாது” என்று கூறியிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடதகக்து.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *