
‘கேங்கர்ஸ்’ படம் பார்த்துவிட்டு சிம்பு பாராட்டி இருக்கிறார். சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘கேங்கர்ஸ்’. இந்தப் படத்துக்கு மக்கள் மத்தியிலான வரவேற்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. தற்போது இப்படத்தினை பார்த்துவிட்டு சிம்பு பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
‘கேங்கர்ஸ்’ படம் தொடர்பாக சிம்பு “’கேங்கர்ஸ்’ பார்த்தேன். ஒரே சிரிப்பு ரகளை. வடிவேலு சார் தனது மேஜிக்கால் மொத்த படத்தையும் தன்வசப்படுத்தி விட்டார். சுந்தர்.சி அண்ணா மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்திருக்கிறார்.