
விகடன் நம்பிக்கை விருதுகள் 2024
ஆண்டுதோறும் நம்பிக்கை விதைக்கும் ஆளுமைகளை கொண்டாடும் நம் விகடனின் இந்தாண்டிற்கான நம்பிக்கை விருது வழங்கும் விழா, இன்று மாலை 5 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவிருக்கிறது.
2024 ஆம் ஆண்டின் டாப் 10 மனிதர்கள் மற்றும் டாப் 10 இளைஞர்கள் விருது, நம்பிக்கை விருதுகளில் உச்சமாக கருதப்படும் பெருந்தமிழர் விருது ஆகியவை வழங்கும் விழா நடைபெறும் கலைவாணர் அரங்கை நோக்கி ஆளுமைகளின் வருகையை உச்சி முகர்ந்து வரவேற்க தயாராகிக் கொண்டிருக்கிறது விகடன்.
விருதுகள் பட்டியல்:
டாப் 10 நம்பிக்கை மனிதர்கள்
எதிர்காலத்துக்கான நன்னம்பிக்கை – நான் முதல்வன் திட்டம்
ஆய்வுப்பறவை – ஆ.இரா.வேங்கடாசலபதி
அன்பின் கலைஞன் – ச.பிரேம்குமார்
பூர்வகுடிகளின் நேசர்கள் – தனராஜ் – லீலாவதி
பெருமிதப் பெண்மணி – ஸ்மிதா சதாசிவன்

அக்கறை அதிகாரி – வெங்கடேஷ்
விட்டுக்கொடுக்காத சட்டப் போராளி – வழக்கறிஞர் லோகநாதன்
மரபிசைக் காவலர்கள் – ஷேக் மெகபூப் சுபானி – காலீஷா பீ மெகபூப்
நல்மனத் தொழிலதிபர் – நேப்பாள்ராஜ்
மனிதநேய மீட்பர்கள் – P.C.V.C (இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் ஃபார் க்ரைம் பிரிவென்ஷன் அண்ட் விக்டிம் கேர்)
டாப் 10 நம்பிக்கை இளைஞர்கள்:
நம்பிக்கை நாயகன் – ஹரிஷ் கல்யாண்
மாற்றத்தின் நாயகர்கள் – கண்ணகி நகர் முதல் தலைமுறைக் கற்றல் மையம்
ஒலி ஆளுமைகள் – சுரேன், அழகியகூத்தன்
மேட்ச் வின்னர் – கமலினி
எதிர்காலத்தின் இசை முகம் – சாய் அபயங்கர்

தடையுடைத்த திருநங்கை – சிந்து கணபதி
மாண்புமிகு மருத்துவர் – சுவாமிநாதன்
மாற்றி யோசித்தவர் – Mr GK
தொழில்நுட்பத் தமிழன் – அக்னீஸ்வர் ஜெயப்பிரகாஷ்
வெற்றித் தமிழ் மகள் – காஜிமா
******
பெருந்தமிழர் விருது – தோழர் இரா.நல்லகண்ணு
