
பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு சுமத்திய வர்ஜீனியா கியூஃப்ரே (Virginia Giuffre) என்ற பெண் தற்கொலை செய்துகொண்டார்.
2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு எதிராக வர்ஜீனியா கியூஃப்ரே பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்ந்தார். தன்னுடைய 17 வயதில் ஜெஃப்ரி எப்ஸ்டீனால் கடத்தப்பட்டு, இளவரசரிடம் அழைத்துச் சென்றதாகவும், அப்போது இளவரசர் என்னை பாலியல் அடிமையாகப் பயன்படுத்திக்கொண்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்துவந்த நிலையில், ஆரம்பம் முதலே இந்தக் குற்றச்சாட்டை இளவரசர் ஆண்ட்ரூவ் மறுத்துவந்தார்.
இதற்கிடையில், வர்ஜீனியா கியூஃப்ரே ஒரு சாலை விபத்தைச் சந்தித்தார். இந்த வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில், வர்ஜீனியா கியூஃப்ரேவும் ஆஸ்திரேலியாவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர். இப்போது வர்ஜீனியா கியூஃப்ரேவுக்கு வயது 41. அவருக்கு மூன்று குழந்தைகள் இருப்பது குறிப்பிடதக்கது.
