
சென்னை: கோயம்புத்தூரில் நடைபெற உள்ள “உலக புத்தொழில் மாநாடு – 2025” கான இலச்சினையை வெளியிட்டு, மாநாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு இணையதளத்தினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் சார்பில் கோயம்புத்தூரில் நடைபெற உள்ள “உலக புத்தொழில் மாநாடு -2025” க்கான இலச்சினையை வெளியிட்டு, மாநாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு இணையதளத்தினை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.