
சென்னை: முன்னாள் சட்டமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கான மாத ஓய்வூதியம் ரூ.35 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.17,500 ஆகவும் மற்றும் மருத்துவப் படி ரூ.1 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும் என்று பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய ஓய்வூதியத்தைப் பற்றி இங்கே குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். அதேபோன்று, உறுப்பினர் ஜெகன்மூர்த்தி பேசுகிறபோது அதைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.