
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் இந்தியாவை அதிர்ச்சியடையச் செய்தது. இந்தத் தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என லஷ்கர் இ தொய்பாவும், பாகிஸ்தானும் தெரிவித்திருந்தன. இந்த நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருந்தார்.
அதில், “ கடந்த முப்பது ஆண்டுகளாக மேற்கு மற்றும் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்காக பயங்கரவாத அமைப்புகளை ஆதரித்து, பயிற்சி அளித்து, நிதியளிக்கும் மிக மோசமான வேலையை செய்துவருகிறோம்.
சோவியத் நாடுகள்- ஆப்கானிஸ்தான் போரின் போதும், 9/11 க்குப் பிறகு தாலிபானுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான போரின் போதும் பாகிஸ்தான் மேற்கு நாடுகளுடன் இணைந்திருக்காவிட்டால் பாகிஸ்தானின் கடந்த கால வரலாறு எந்தக் குற்றச்சாட்டுக்கும் இடமில்லாததாக இருந்திருக்கும்” எனக் குறிப்பிட்டார்.

ஆப்கானிஸ்தானுடனான எல்லை பிரச்னைக் காரணமாக சோவியத் – ஆப்கானிஸ்தான் போரில் சோவியத்துகளை எதிர்த்துப் போராட ஆயுதமேந்திய போராளிகளுக்கு பயிற்சி அளித்து அடைக்கலம் கொடுத்தது பாகிஸ்தான். இதன் மூலம் பாகிஸ்தான் அமெரிக்காவை ஆதரித்தது. அதனால், அமெரிக்காவிற்கும் சோவியத்துகளுக்கும் இடையிலான மறைமுகப் போர் பாகிஸ்தானுக்கும் முக்கியப் பங்காக இருந்தது. கொடுத்தது.
ஒசாமா பின்லேடனின் அல்-கொய்தாவுக்கு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அடைக்கலம் கொடுத்தனர். செப்டம்பர் 11, 2001 தாக்குதலின் விளைவாக அமெரிக்கா ஆப்கானிஸ்தானின் மீது போர் தொடுத்தது. எனவே, தலிபான்களை வேரோடு அகற்ற வேண்டும் என்ற முடிவோடு அமெரிக்கா தலைமையிலான படைகளை ஆதரிக்கும் நடவடிக்கைகளை பாகிஸ்தானும் மேற்கொண்டதும் கவனிக்கத்தக்கது.