• April 26, 2025
  • NewsEditor
  • 0

‘சென்னை தோல்வி!’

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டியில் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி ஏறக்குறைய ப்ளே ஆப்ஸ் வாய்ப்பை இழந்துவிட்டது.

CSK vs SRH

இந்தத் தோல்விக்குப் பிறகு சென்னை அணியின் கேப்டன் தோனி சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார்.

‘தோனி விளக்கம்!’

தோனி பேசியதாவது, ‘நாங்கள் விக்கெட்டுகளை இழந்துகொண்டே இருந்தோம். முதல் இன்னிங்ஸில் பேட்டிங்குக்கு சாதகமாகத்தான் பிட்ச் இருந்தது. இந்த பிட்ச்சில் 150 என்பது நியாயமான ஸ்கோர் இல்லை. 15-20 ரன்களை குறைவாக எடுத்துவிட்டோம். டெவால்ட் ப்ரெவிஸ் மாதிரியான வீரர் எங்களுக்கு தேவைப்பட்டார். மிடில் ஓவர்களில் ஒரு 15 ரன்களை அதிகமாக எடுக்க வேண்டும்.

Dhoni
Dhoni

நாங்கள் அதில்தான் சறுக்கிக் கொண்டிருந்தோம். அதை சரி செய்ய எங்களுக்கு ஒரு வீரர் தேவைப்பட்டார். டெவால்ட் ப்ரெவிஸ் நம்பிக்கையளிக்கும் வகையில் ஆடியிருக்கிறார். இந்த மாதிரியான பெரிய தொடர்களில் அணியில் ஒன்றிரண்டு பிரச்சனை இருந்தால் அதை தீர்க்க முயலலாம்.

CSK
CSK

ஆனால் பெரும்பாலான வீரர்கள் சரியாக செயல்படாதபட்சத்தில் அது சிரமம்தான். அதனால்தான் அணியில் நிறைய மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கிறது. பிரச்சனைகளோடு அப்படியே தொடர முடியாது. டி20 போட்டிகள் நிறையவே மாறிவிட்டது. எல்லா போட்டிகளிலும் 180-200 ரன்களை எடுக்க சொல்லவில்லை. ஆனால், சூழலை உணர்ந்து அதற்கேற்ப ஒரு நல்ல ஸ்கோரை பேட்டிங்கில் எடுக்க வேண்டும்.’ என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *