
நாட்டில் தங்கியுள்ள அனைத்து பாகிஸ்தானியர்களையும் அடையாளம் காணவேண்டும் என்று அனைத்து மாநில முதல்வர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22-ம் தேதி தீவிரவாத கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.