
சென்னை: நசரத்பேட்டை- திருமழிசை நெடுஞ்சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணசாமி, "நசர்த்பேட்டை, திருமழிசை நெடுஞ்சாலை சந்திப்பல் மேம்பாலம் கட்ட அரசு ஆவண செய்யுமா?" என்று கேள்வி எழுப்பினார்.