• April 25, 2025
  • NewsEditor
  • 0

ஜம்மு பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் இந்திய சமூகத்தைப் பிரிப்பதற்காக நடத்தப்பட்டது என்றும், இந்த கீழ்த்தரமான செயலை எதிர்த்துப் போராடவும் தீவிரவாதத்தைத் தோற்கடிக்கவும் நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இன்று (வெள்ளிகிழமை) ஸ்ரீநகரில் உள்ள இந்திய ராணுவ மருத்துவமனையில் பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார் ராகுல் காந்தி.

சமூகத்தை பிளவுபடுத்துவதே நோக்கம்

அங்கு பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், “இது மிகவும் பயங்கரமான துயரம். என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவும், உதவவும் நான் இங்கு வந்தேன். ஜம்மு காஷ்மீரில் உள்ள அத்தனை மக்களும் இந்த தீவிரவாத தாக்குதலை கண்டித்துள்ளனர், இந்த நேரத்தில் நாட்டுக்கு உறுதுணையாக இருக்கின்றனர்.

குடும்ப உறுப்பினர்களை இழந்த ஒவ்வொருவருக்கும் என் அன்பையும் அக்கறையையும் உரித்தாக்குகிறேன். மொத்த தேசமும் அவர்களுடன் ஒன்றுபட்டு நிற்கிறது என்பதை அனைவரும் அறிய வேண்டும் என விரும்புகிறேன். ” எனப் பேசியுள்ளார்.

மேலும், “சமூகத்தைப் பிளவு படுத்துவதே நடந்த தாக்குதலுக்கு பின்னால் இருக்கும் உள்நோக்கம். ஒவ்வொரு இந்தியரும் ஒன்றாக இருப்பதன் மூலம் பயங்கரவாதிகளின் முயற்சியை தோற்கடிக்க வேண்டும்” என்றும் கூறியிருக்கிறார்.

Srinagar Meeting

காஷ்மீர் முதலமைச்சருடன் சந்திப்பு

வியாழக்கிழமை நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டித்த ராகுல் காந்தி, அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் முழு ஆதரவைத் தெரிவிப்பதாகக் கூறியிருக்கிறார்.

அத்துடன் நாடுமுழுவதுமிருந்து காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் பற்றிய செய்திகள் வருவது கவலையளிப்பதாகக் கூறியுள்ளார்.

ஶ்ரீநகரில் காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா மற்றும் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோரைச் சந்தித்தார் ராகுல் காந்தி.

சந்திப்புக்குப் பிறகு, “என்ன நடந்தது என்பதை அவர்கள் இருவரும் விளக்கினர். அவர்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு நானும் எங்கள் கட்சியும் ஆதரவாக இருப்போம் என உறுதியளித்துள்ளேன்.” எனக் கூறியுள்ளார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *