
‘சென்னை vs ஹைதராபாத்!’
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் டாஸை வென்று முதலில் பந்து வீசுகிறது.
‘தோனி பேசியவை!’
டாஸூக்கு பின் தோனி பேசுகையில், ‘நாங்களும் முதலில் பந்துவீசவே நினைத்தோம். ஏனெனில், நேற்று இங்கே பயிற்சி செய்தோம். காற்றில் ஈரப்பதத்தின் தாக்கம் இருந்தது. அதனால் முதலில் பந்துவீசுவதுதான் சரியாக இருந்திருக்கும். நாங்கள் 200% சரியாக ஆடவில்லை என்பதை முழுமையாக ஒத்துக்கொள்கிறேன்.
பேட்டிங், பௌலிங், பீல்டிங் என எதிலுமே நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. நாம் நம்முடைய பணியை சரியாக செய்யாவிடில் மற்ற வீரர்களின் மீது அழுத்தம் ஏறும். 6 போட்டிகளை பற்றியும் யோசிக்காமல் ஒவ்வொரு போட்டியாக அணுக வேண்டும். ரிசல்ட்டை பற்றி யோசிக்காமல் ப்ராசஸை அனுபவித்து மகிழ்ச்சியாக செய்ய வேண்டும்.

எஞ்சிய போட்டிகளில் இதையே செய்ய நினைக்கிறோம். 2010 க்கு முன்பாக இங்கிருந்த பிட்ச் சிறப்பாக இருந்தது. இப்போதும் மைதான பணியாளர்கள் சிறப்பான பிட்ச்சை கொடுக்கவே பணிபுரிகிறார்கள்.

ஆனால், அந்த செம்மண் விக்கெட்தான் சிறந்தது. இன்று எங்கள் அணியில் இரண்டு மாற்றங்கள் இருக்கிறது. ரச்சினுக்கு பதில் ப்ரெவிஸூம் விஜய் சங்கருக்கு பதில் தீபக் ஹூடாவும் வருகிறார்கள்.’ என்றார்.