• April 25, 2025
  • NewsEditor
  • 0

‘ஜெயிலர் 2’ படத்தில் மீண்டும் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஃபகத் ஃபாசில். நெல்சன் இயக்கி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 30% காட்சிகளை முடித்துவிட்டது படக்குழு. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா என முதல் பாகத்தில் உள்ள நடிகர்கள் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள்.

தற்போது இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஃபகத் ஃபாசில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ரஜினி – ஃபகத் பாசில் சம்பந்தப்பட்ட காட்சிகள் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. முன்னதாக இருவரும் ‘வேட்டையன்’ படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *