
சிம்புவுடன் இணைந்து நடிக்கவிருப்பதை உறுதி செய்திருக்கிறார் சந்தானம். ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் சிம்பு புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. தற்போது நாயகனாக நடித்து வருவதால், சிம்புவுக்காக ஒப்புக் கொண்டுள்ளார் எனவும் கூறப்பட்டது. இதற்காக அவருக்கு பெரிய சம்பளம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.
இதனிடையே, ‘டிடி ரிட்டன்ஸ் 2’ படத்துக்காக அளித்த பேட்டியில், சிம்புவுடன் நடிப்பதை உறுதி செய்திருக்கிறார் சந்தானம். சிம்பு கேட்டால் ‘நோ’ சொல்லமாட்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தப் படத்துக்காக புதிய படம் ஒன்றை தாமதமாக தொடங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.