
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி என்கிற 14 வயது வீரர் ஆடி வருகிறார். ஐ.பி.எல் வரலாற்றின் மிக இளம் வயது வீரர் எனும் பெருமையையும் வைபவ் பெற்றிருக்கிறார்.
லக்னோவுக்கு எதிரான அறிமுக போட்டியில் 34 ரன்களை எடுத்து அசத்தியிருந்தார். எதிர்கொண்ட முதல் பந்தையே சிக்சரும் ஆக்கியிருந்தார். அது அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்த்தது. அனைவரும் வைபவ்வை உச்சி முகர்ந்து பாராட்டினர். ஆனால், அதே வைபவ் நேற்று பெங்களூருக்கு எதிரான போட்டியில் 16 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியிருந்தார்.
இந்நிலையில் வைபவ் சூர்யவன்ஷி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் பேசியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது, ‘கிரிக்கெட்டை பொறுத்தவரை சிறப்பாக விளையாடும் போது பாராட்டுகள் குவியும். அதேபோல மோசமாக விளையாடும்போது விமர்சனங்கள் வரும்.
ஐபிஎல் தொடரில் 1 அல்லது 2 போட்டிகளில் விளையாடி உச்சக்கட்ட புகழை அடைந்து, திடீரென காணாமல் போய்விடுவார்கள். அதன்பின் அவர்களை மீண்டும் பார்க்கவே முடியாது. அதற்கு காரணம் அந்த வீரர்கள் தங்களின் மனதில் ஸ்டார் என்று நினைத்துக் கொள்வதுதான்.
வைபவ் சூர்யவன்ஷியைப் பொறுத்தவரை ஐபிஎல் தொடரைக் குறைந்தது 20 ஆண்டுகளாவது விளையாட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்க வேண்டும். விராட் கோலி 19 வயதில் ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டார். இதுவரை 18 சீசன்களில் விளையாடி இருக்கிறார். விராட் கோலியை போல் நீண்ட ஆண்டுகள் வைபவ் சூர்யவன்ஷி விளையாட வேண்டும்.

ஆனால் ஐபிஎல் தொடரில் விளையாடுவதே மகிழ்ச்சி என்று நினைத்துகொண்டு, கோடிகளில் சம்பாதிப்பதே போதும் என்று நினைத்தால், அவ்வளவுதான் ஒன்றும் செய்ய முடியாது. ” என்று வைபவ் சூர்யவன்ஷிக்கு அறிவுரை வழங்கும் தொனியில் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…