
சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சியில் இதுவரை 309 பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 2.49 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய, ராமநாதபுரம் தொகுதி எம்எல்ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம், "ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதலாக வேலைவாய்ப்பு முகாம் நடத்த அரசு ஆவண செய்யுமா?" என்று கேள்வி எழுப்பினார்.