
சத்தீஸ்கர் – தெலங்கானா எல்லையில் நேற்று நடைபெற்ற என்கவுன்ட்டரில் 3 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் மாவோயிஸ்ட் ஒழிப்பு பணியில் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 10,000 வீரர்கள் கடந்த திங்கள் கிழமை முதல் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் தெலங்கானா அருகேயுள்ள , சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தின் கரேகுட்டா மலைப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று தேடுதல் வேட்டை நடைபெற்றது. அப்போது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்ட்டுகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் இரு தரப்பினர் நீண்ட நேரம் கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.