
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
அமிர்தசரஸ், வாகா பார்டருக்கும் மகளிர் மட்டும் பயணக்குழுவில் என் முதல் மகள் அழைத்து சென்றாள்.
அமிர்தசரஸ் என்றாலே பொற்கோவில் நினைவில் வரும்… சீக்கியர்களின் புனித தலம் ஸ்ரீஹர்மின்தர் சாஹிப் காலை, மாலை இரண்டு வேளையும் தரிசித்தோம்.
சீக்கியர்களின் ஐந்தாவது குரு அர்ஜுன், ஆதிகிரந்தை குருத்வாரவில் வைத்து வழிபாடு ஆரம்பித்தார்..
மகாராஜா ரஞ்சித் சிங் 1830ல் தங்க கூறையில் கோவில் கோபுரத்தை வேய்ந்தார்.






கோயிலின் பிரசாதம் லங்கர் தரும் சமையலறை மிக பிரம்மாண்டம். இது நுழைவாயிலின் வெளியே உள்ளது.
நாங்களும் சிறிது உதவி செய்தோம்.
சாத்விக உணவை எல்லோரும் சமத்துவமாக உண்ணலாம்.
கரசேவையின் ஒரு பகுதியாக உணவு பிரார்த்தனை உள்ளவர்கள் பரிமாறுகிறார்கள்.
குளத்தின் நடுவில் உள்ள கோயில் இந்துக்கள் வழிபாடு செய்யுமிடம்.
வரலாற்றின் கொடுமையான ஜாலியன் வாலாபாக், பார்டீஷியன் மியூசியம் – கனத்த இதயத்தோடு பார்த்தோம்.
அமிர்தசரஸில் லஸ்ஸியில் பல்வேறு வகைகளை அருந்தலாம். பாரட்டாவின் விதவிதமான சுவைகளை ரசித்து சாப்பிடலாம்.
ஹால்பசார் மார்கெட்டில் பூல்காரி துப்பட்டாக்களை பாட்டியாலாக்களுடன் வாங்கலாம்.
பஞ்ஜாபி மசாலா, பப்படங்களும் கிடைக்கும்..

இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதியான வாகாபார்டர் பாகிஸ்தான் பக்கம் உள்ள இடம். அட்டாரி பார்டர் இந்தியா பக்கம் உள்ள இடம்.
இந்தியாவின் எல்லைபடை வீரர்களும், பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் பாதுகாப்புப் படைகள் இணைந்து பின்பற்றி வரும் தினசரி நிகழ்வு இந்த வண்ணமயமான பயிற்சி.
தேசபக்திபாடல்கள் கூடியிருக்கும் மக்களால் பாடப்படும் போது தேச உணர்ச்சி மேலிடுகிறது.
இரவு உணவை அமிர்தசரஸில் தங்கியிருந்த ஹவேலியில் சாப்பிட்டு அவரவர் சொந்த ஊர்களுக்கு நல்ல நினைவுகளைச் சுமந்து திரும்பினோம்.
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா’ கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு – `சுற்றுலா’. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
-
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
-
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
-
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
-
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
-
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
-
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
-
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
-
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.