• April 25, 2025
  • NewsEditor
  • 0

ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நீ……ண்டுகொண்டே போகின்றது.

ரஷ்யா, உக்ரைன் இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தையில் பிடி கொடுக்க மறுக்கிறது. ‘நாங்கள் மத்தியஸ்த்தில் இருந்து விலகிவிடுவோம்’ என்று அமெரிக்கா பயமுறுத்தி பார்த்தும் எந்த பலனும் இல்லை.

சமீபத்தில் லண்டனில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில், அமெரிக்கா முன்வைத்த அம்சங்களை மறுத்து முறுக்கிக்கொண்டது உக்ரைன்.

ஜெலன்ஸ்கி, ட்ரம்ப், புதின்

ரஷ்யாவின் பக்கம் அமெரிக்கா

உக்ரைனின் இந்தக் கோபத்திற்கு காரணம், அமெரிக்கா முன்வைத்த அம்சங்களில் மிக முக்கியமான இரண்டு – முன்னர் ரஷ்யாவிடம் இருந்த கிரிமியா ரஷ்யாவின் பிரதேசமாகவே தொடரும் மற்றும் உக்ரைன் நோட்டோவில் சேர முடியாது என்பதாகும்.

இந்த இரண்டுமே ரஷ்யாவிற்கு சாதகமானவை. இது தான் உக்ரைனின் பெரும் கோபத்திற்கு காரணம்.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அவர் பேசிவரும் பெரும்பாலானவை ரஷ்யாவின் பக்கமே இருக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், ரஷ்ய அதிபர் புதினும் நட்புடன் தான் உள்ளனர் எனபது உலகறிந்த விஷயம்.

ட்ரம்ப்பின் கடுமையான பதிவு

இந்த நிலையில், ட்ரம்ப் புதினை கடுமையாக விமர்ச்சிக்கும் விதமாக தனது ட்ரூத் பக்கத்தில் நேற்று பதிவிட்டுள்ளார். அது…

“கீவ் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல் எனக்கு பிடிக்கவில்லை. இது தேவையில்லாதது மற்றும் மிக தவறான நேரம் இது. நிறுத்துங்கள்! ஒவ்வொரு வாரமும் 5,000 வீரர்கள் இறக்கிறார்கள். அமைதி ஒப்பந்தத்தை முடிப்போம்”.

பின்னணி என்ன?

லண்டனில் அமைதி பேச்சுவார்த்தையில் உக்ரைன் ஒப்புக்கொள்ளாததையடுத்து, உக்ரைனின் தலைநகரமான கீவ் மீதும், இன்னொரு நகரமான கார்கிவ் மீதும் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி உயிரிழப்புகள் மற்றும் பலருக்கு படுகாயங்கள் ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *