
புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையோருக்கு கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டனை வழங்கப்
படும் என்று பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த இந்திய ராணுவம் திட்டமிட்டு உள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம், உரியில் உள்ள ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி இந்திய இந்திய கமாண்டோ படை வீரர்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் தரைவழியாக நுழைந்து தீவிரவாத முகாம்களை அழித்தனர். இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.