• April 25, 2025
  • NewsEditor
  • 0

அழகு என்றாலே அது இளம் வயதுனருடன் மட்டுமே தொடர்புபடுத்தப்படுகிறது. இந்தக் கருத்தை மாற்றும் வகையில் பீப்புல் பத்திரிக்கை 62 வயதான ஹாலிவுட் நடிகைக்கு 2025-ம் ஆண்டின் உலகின் மிகவும் அழகானப் பெண் என்றப் பட்டத்தை வழங்கியிருக்கிறது. பீப்பிள் பத்திரிகையின் சமீபத்திய இதழில் நடிகை டெமி மூர் 2025-ம் ஆண்டின் உலகின் மிக அழகான பெண் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறார்.

டெமி மூர்

அந்தப் பத்திரிகையின் அட்டைப்படத்துக்கான நேர்காணலில், “60 வயதுகளில் அழகாக இருப்பதாக கூறுகிறார்கள். என் உடலுக்கு நான் அதிக மதிப்பைக் கொடுத்தேன். அதனால் என் உடல் என்னை இப்போது இந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது. நான் கண்ணாடியைப் பார்க்கும்போதெல்லாம், ‘ஐயோ கடவுளே எனக்கு வயதாகிவிட்டதே, என் முகம் வாடிவிட்டதே’ என்றெல்லாம் புலம்ப மாட்டேன். அப்படி புலம்புவதில் எந்த அர்த்தமும் இல்லை.

எனவே அதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதனால்தன் இன்று நான் இந்த நிலையில் இருக்கிறேன். அதற்கான காரணம் என் தோற்றம் என் மதிப்பையோ அல்லது நான் யார் என்பதையோ வரையறுக்கவில்லை. நான் இளமையாக இருந்தபோது, அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக என்னை நானே சித்திரவதை செய்து கொண்டேன். உண்மையில் என்னை நானே தண்டித்துக்கொண்டேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

டெமி மூர்
டெமி மூர்

இப்போது எனக்கு என் உடலுடன் மிகவும் உள்ளுணர்வு மிக்க, நிதானமான உறவு இருக்கிறது. அது எனக்கு ஏதாவது சாப்பிட வேண்டும் என்று சொல்லும்போதோ, ​​அது தாகமாக இருக்கிறது என்று சொல்லும்போதோ நான் என் உடலைப் புரிந்துகொண்டு அதற்கு தேவையானதைக் கொடுக்கிறேன். இப்போது எனக்கும் என் உடலுக்கும் மத்தியில் மிகவும் இணக்கமான உறவு இருக்கிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

யார் இந்த டெமி மூர்:

1962-ல் பிறந்த டெமி மூர் ஒரு மாடலாக வாழ்க்கையத் தொடங்கினார். கோஸ்ட். எ ஃபியூ குட் மென், இன்டீசென்ட் ப்ரொபோசல் போன்ற படங்களின் மூலம் தன் திரையுலகில் புகழ் பெற்றார்.

டெமி மூர்
டெமி மூர்

பின்னர் 1996-ல் ஸ்ட்ரிப்டீஸ் நடித்ததன் மூலம் உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக தன்னை உயர்த்திக் கொண்டார். கடந்த ஆண்டு வெளியான ‘தி சப்ஸ்டன்ஸ்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பாராட்டுகளைப் பெற்ற இவர், ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டார். இந்தப் படத்துக்காக கோல்டன் குளோப் விருதுப் பெற்றிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *