• April 25, 2025
  • NewsEditor
  • 0

இயக்குநரும் நடிகருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தன்னுடைய மனைவி ஷோபா சந்திரசேகருக்கு ஒரு பி.எம்.டபுள்யூ காரை அன்பளிப்பாக வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

இந்த தம்பதி நேற்றைய தினம் தங்களுடைய 52-வது திருமண நாளைக் கொண்டாடியிருக்கிறார்கள்.

SAC & Shoba

இந்த 52-வது திருமண நாளைச் சிறப்பானதாக மாற்றிட தன்னுடைய மனைவிக்கு இந்த பி.எம்.டபுள்யு காரை பரிசாக வழங்கியிருக்கிறார்.

இது குறித்து எஸ்.ஏ.சி, “எனக்குத் திருமணம் ஆகி 52 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த 52 ஆண்டுகளாக எவ்வளவோ பிரச்னைகள் இருந்துள்ளன. நான் அவளை எவ்வளவோ தொந்தரவுகள் செய்து இருக்கிறேன்.

தொல்லைகள் கொடுத்திருக்கிறேன். இவை அனைத்தையும் தாங்கிக் கொண்டு ஒரு பெண் என்னுடன் இத்தனை ஆண்டுக் காலம் வாழ்ந்திருக்கிறாள் மகிழ்ச்சியாக.

அதை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.

SAC & Shoba
SAC & Shoba

திருமணமான புதிதில் மனைவிக்குப் பரிசு கொடுப்பது எல்லாம் சாதாரணமான விஷயம்.

ஆனால் இந்த 52 ஆண்டுக் கால வாழ்க்கையை நினைத்து என் மனைவிக்கு நான் ஒரு பிஎம்டபிள்யூ கார் பரிசளித்திருக்கிறேன் அவளது மகிழ்ச்சிக்காக. இதை நினைத்து நான் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.

இயக்குநர் என்பதைத் தாண்டி பல திரைப்படங்களில் நடிகராகவும் களம் கண்டிருக்கிறார் எஸ்.ஏ.சி. சமீபத்தில் சின்னத்திரையிலும் இவர் கவனம் காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *