வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்ட மேற்படிப்பு படித்துக் கொண்டு இருந்த நேரம் எனது ஆசிரியர் மூலம் ஒரு செய்தி, “மூலிகைகளை இனம் காணச் செல்ல இருக்கிறோம், விருப்பம் உள்ளவர்கள் தங்களின் பெயர்களை கொடுக்கலாம்” என்று கூறினார்.
எந்த இடம் என்று கேட்டேன் மேற்கு தொடர்ச்சிமலையில் உள்ள பாண்டியன் கோட்டை என்றார்.
உடனே மனதில் ஒரு வித மகிழ்ச்சி இது நாள் வரை கதைகளாக மட்டுமே கேட்ட இடம், அதனை சென்று பார்க்க வாய்ப்பு கிடைத்ததும் நான் நிச்சயம் வருகிறேன் என்றேன்.
பாண்டியன் கோட்டை என்பது பாண்டியர்கள் தங்களின் எதிரிக்கு பயந்து பதுங்கி இருந்த இடம் ஆகும். இன்றும் அங்கு கோட்டை அமைப்பு மற்றும் அவர்கள் வாழ்ந்த தடயங்கள் காணப்படுகிறது.
காணி மக்கள் கூறும் கதையில், பாண்டியர்கள் இங்கு வாழ்ந்த போது எதிரிகளிடம் தப்பிக்க மலையின் அடிவாரம் முதல் கோட்டை வரை பாதுகாவலர்கள் முரசு கொண்டு எச்சரிக்கைச் செய்யும் விதமாக இருந்தனர்.
ஒரு முறை தூக்கத்தில் ஒரு வீரர் தவறவிட்ட முரசு தட்ட பயன்படும் கோல் தவறுதலாக முரசில் பட எதிரிகள் வருகிறார்கள் என்று மற்ற அனைவரும் ஓசை எழுப்ப மன்னர் குருவாள் கொண்டு தலையை துண்டித்து கொள்கிறார். அவரது தலை ஒதுங்கிய இடம் தலையணை என்றும் முண்டம் ஒதுங்கிய இடம் முண்டந்துறை என்றும் இன்று வரை வழங்கப்படுகிறது.
இந்த கதையை நினைத்துக் கொண்டே, காலை 5 மணிக்கு பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் இருந்து எங்களது பயணம் தொடங்கியது. சுமார் 7 மணியளவில் வி.கே.புரம் அருகில் உள்ள ஒரு உணவகத்தில் காலை உணவு சாப்பிட்டோம்.
பின்பு பாபநாசம் வன சோதனைச் சாவடியில் எங்களது அனுமதி கடிதத்தைக்கொடுத்து ஒப்புதல் பெற்று சென்றோம். எங்களது பயணத்தில் முக்கிய நபர்கள் காணி குடியிருப்பைச் சேர்ந்த பூதத்தான், அவரது மனைவி மற்றும் வனக் காப்பாளர் உடன் வந்தனர். முதலில் அவரது வீட்டிற்குச் சென்று எங்கள் தண்ணீர் தாகத்தை போக்கிக்கொண்டு மேலும் தேவையான தண்ணீர் எடுத்துக் கொண்டோம்.
நாங்கள் வந்த வாகனம் காரையாறு அணை தாண்டி சிறிது தூரம் வரை சென்று எங்களை இறக்கிவிட்டது. பின்பு அங்கிருந்து நடைபயணமாக பாண்டியன் கோட்டைக்கு செல்லலாம் என்றும் போகும் வழியில் உள்ள மூலிகைகளை பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினார்கள்.
இயற்கை அழகை காணும்போது மிகுந்த உற்சாகம் தோன்றியது, ஆனாலும் அழகு இருக்கும் இடத்தில் தான் ஆபத்தும் இருக்கும் என்பதை போல வழியில் யானை, புலி, கரடி, பாம்பு போன்றவை இருக்கலாம் என்றார்கள். எனவே மிகுந்த கவனமாகச் சென்றோம்.
பயணம் தொடங்கிய பத்து நிமிடத்தில் விரியன் பாம்பு ஒன்று எந்த சலனமும் இல்லாமல் போகும் பாதையில் இருந்ததை கண்டோம், எந்த வித பாதிப்பும் இல்லாமல் கடந்து சென்று மூலிகைகளை பார்த்து குறிப்பு எடுத்துக் கொண்டே சென்றோம். போகும் வழியில் பல ஏற்ற இறக்கம் மற்றும் அடர்ந்த வன பகுதியில் சென்றோம்.
ஒரு மணி நேரம் கழித்து அகத்தியர் வாழ்ந்த பொதிகைமலை காட்சி காணக் கிடைத்தது அதனைப் பார்த்துக் கொண்டே பயணம் சிறப்பாக அமைய வேண்டும் என்று வேண்டி சிறிது நேரம் ஓய்வு எடுத்தோம். அந்த இடம் வனபயிற்சியாளர்கள் செல்லும்போது ஒய்வு எடுக்கும் இடம் என்று கூறினர்.
சற்று அடர்ந்த வனபகுதியை அடைந்தோம் அங்கு தான் முதன் முதலில் புலியின் எச்சத்தினை பார்த்தோம்.
பின்பு ஒரு மிக பெரிய ஏற்றம் எனவே ஒரு கம்பு கொண்டு நடக்க ஆரம்பித்தேன், சிறிது தூரம் கடந்ததும் சமதளத்தை அடைந்தோம் அதில் எலுமிச்சை புற்கள் அடர்த்தியாகவும் மற்றும் இரண்டு அடி உயரமே உள்ள ஈச்ச மரங்கள் அதிகமாக காணப்பட்டது, அதில் உள்ள பழங்கள் உண்டு பயணத்தை தொடர்ந்தோம். இந்த இடங்களில் கரடி நடமாட்டம் உண்டு என்பதால் கரடியின் எச்சம் அதிகம் காணப்பட்டது.
பாதை நீண்டுக் கொண்டே இருந்ததால் எனக்கு பலம் குறைந்து மிகவும் சோர்வு அடைந்தேன். அப்பொழுது தான் உடற்பயிற்சி முக்கியம் என்பதை உணர்ந்தேன்.
எனது ஆசிரியரிடம் சென்று மிகவும் சோர்வாக உள்ளது என்றேன், அவர் தன்னிடம் இருந்த கடலை மிட்டாய் ஒன்றை கொடுத்து பாண்டியர்களின் கதையை கூறினார் மீண்டும் உற்சாகம் வந்தது. மதியம் 1மணி மீண்டும் அடர்ந்த காட்டுப் பகுதியை அடைந்தோம்.
சற்று தூரத்தில், கண் முன்னே தேடி வந்த ஒரு அதிசயம், அது தான் பாண்டியன் கோட்டை. அதனை தொட்டு வணங்கி கோட்டைக்கு உள்ளே சென்றோம் மனதில் ஒரு நெகிழ்ச்சி சபரிமலைக்குச் சென்று ஐயனை கண்டதுப் போல் உற்சாகம்.
உள்ளே சென்று சுற்றிப் பார்க்கும் போதுதான் தெரிந்தது மூன்று பக்கம் பெரிய பள்ளதாக்கு ஒரு பக்கம் மட்டுமே நுழைய கூடிய கோட்டை. சினிமாவில் கூட இப்படி ஒரு கோட்டையைக் கண்டது இல்லை.
உள்ளே சென்றதும் பூதத்தான் அவர்கள் மன்னர் பயன்படுத்திய குளியல் தொட்டி, உரல் போன்ற பொருள்கள் உள்ளது என்றும் புற்கள் அதிகமாக இருப்பதால் காணமுடியவில்லை என்றும் கோடைக் காலத்தில் புற்கள் காய்ந்ததும் காணலாம் என்றார்.
பின்பு சற்று ஓய்வு எடுத்து விட்டு இறங்கத் தொடங்கினோம் மாலை 4 மணி அளவில் காரையாறு அடைந்தோம் சொரிமுத்து அய்யனார் கோவில் அருகில் உள்ள ஒரு கடையில் சாப்பிட்டு விட்டு 7 மணி அளவில் கல்லூரியை அடைந்தோம்.
இந்தப் பயணம் சிறப்பாக முடிய உறுதுணையாக இருந்த வனத்துறை அதிகாரிகள், கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் அனைவருக்கும் மிகுந்த நன்றி.
– மரு.சு.தமிழ் பிரியன்,
உதவி சித்த மருத்துவ அலுவலர்,
அரசு மருத்துவமனை திருவைகுண்டம்,
தூத்துக்குடி மாவட்டம்
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா’ கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு – `சுற்றுலா’. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
-
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
-
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
-
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
-
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025
-
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
-
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
-
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
-
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
-
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.