
‘சென்னை vs ஹைதராபாத்!’
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி சேப்பாக்கத்தில் நாளை நடக்கவிருக்கிறது. இந்நிலையில், போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்புக்கு சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெம்மிங் வந்திந்திருந்தார்
அப்போது, ‘ப்ளே ஆப்ஸூக்கு செல்ல RCB தான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷன்!’ என பேசியிருந்தார்.
‘RCB தான் இன்ஸ்பிரேஷன்!’
ஸ்டீபன் ப்ளெம்மிங் பேசியதாவது, ‘அடுத்து வரும் 6 போட்டிகளையும் வென்று ப்ளே ஆப்ஸூக்கு செல்வோம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இப்படியொரு நிலையிலிருந்து எப்படி வெல்வது என்பதற்கான ப்ளூ ப்ரிண்டை RCB அணி கடந்த ஆண்டு அமைத்துக் கொடுத்திருக்கிறது.

ஒருவேளை நாங்கள் தகுதிப்பெறாவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறோம். நாங்கள் கடந்த காலங்களிலும் இதே மாதிரியான நிலையில் இருந்திருக்கிறோம். ஆனால், பிரச்னைகளை சரி செய்து அடுத்த ஆண்டே சாம்பியனும் ஆகியிருக்கிறோம்.

அடுத்து வரும் அத்தனை போட்டிகளையும் எங்களை சரி செய்துகொள்வதற்கான வாய்ப்பாகத்தான் பார்க்கிறோம். எந்த வாய்ப்பையும் தவறவிடமாட்டோம்.’ என்றார்.
ப்ளெம்மிங் சொல்வதைப் போல 6 போட்டிகளையும் சென்னை அணி வெல்லுமா? உங்களின் கருத்துகளை கமெண்ட்டில் தெரியப்படுத்துங்கள்.