
பாகிஸ்தான் பங்குச்சந்தை : பஹல்காம் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை அடுத்தடுத்து கடகடவென எடுத்து வருகிறது இந்தியா.
இந்தியா இந்த நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிய சில மணிநேரத்திலேயே பாகிஸ்தானின் பங்குச்சந்தை ஆஃப்லைனுக்கு சென்றுவிட்டது.
தற்போது பாகிஸ்தானின் ஸ்டாக் எக்சேஞ்ச் பக்கத்தில், “மறு அறிவிப்பு வரும் வரை பி.எஸ்.எக்ஸ் வலைத்தளம் பராமரிப்பில் உள்ளது. உங்கள் பொறுமைக்கு நன்றி. நீங்கள் itss@psx.com மூலம் தொடர்பு கொள்ளலாம்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்தப் பக்கம் ஆஃப்லைனுக்கு செல்வதற்கு முன்பு கிட்டதட்ட 1,300 புள்ளிகள் சரிந்திருந்தது.
நேற்று ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். தங்களுக்கும் இந்தத் தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் மறுத்திருந்தார்.
இருந்தாலும், இந்தியா பாகிஸ்தானை தான் வலுவாக சந்தேகிக்கிறது.
இதனையடுத்து இந்தியா எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் இப்போது பாகிஸ்தானுக்கு பெரும் பாதகமாக சென்று கொண்டிருக்கிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
