
ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் நம்புராஜன். மீன்பிடித்தல் உள்ளிட்ட கூலி வேலை செய்து வருபவர்.
இவரைக் கடந்த மார்ச் 30-ம் தேதி முதல் காணவில்லை என அவரது சகோதரி ராணி என்பவர், சில நாட்களுக்கு முன் ராமேஸ்வரம் துறைமுகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீஸார், காணாமல் போன நம்புராஜன் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின் போது நம்புராஜன் தனது நண்பரான வெங்கடேசனுடன் சேர்ந்து குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் விசயம் தெரியவந்தது.
இதையடுத்து ராமேஸ்வரம் வெண்மணி நகர்ப் பகுதியைச் சேர்ந்த மீன்பிடி கூலியான வெங்கடேஷனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் போது நம்புராஜனை அடித்துக் கொன்று தனது வீட்டில் புதைத்த அதிர்ச்சி தகவலை வெங்கடேஷ் போலீஸாரிடம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து வெங்கடேஷின் வீட்டிற்குச் சென்ற போலீஸார், அங்குப் புதைக்கப்பட்டிருந்த நம்புராஜனின் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
போலீஸார் விசாரணையில், நண்பர்களாக இருந்த வெங்கடேஷும் நம்புராஜனும் தினமும் ஒன்றாகச் சேர்ந்து மது குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இதற்காக நம்புராஜன், வெங்கடேஷின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் வெங்கடேஷ் வீட்டில் இல்லாத போது அங்கு வந்த நம்புராஜன், வெங்கடேஷின் தங்கையிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
அந்நேரம் வீட்டிற்கு வந்த வெங்கடேஷ் இதனைப் பார்த்தது அதிர்ச்சியடைந்ததுடன், ஆத்திரத்துடன் நம்புராஜனைத் தாக்கியுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே நடந்த மோதலில் வெங்கடேஷ், நம்புராஜனைச் சுவரில் மீது பிடித்துத் தள்ளியதில் நம்புராஜனுக்குப் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இதனால் பதற்றம் அடைந்த வெங்கடேஷ், நம்புராஜனின் உடலை யாருக்கும் தெரியாமல் தனது வீட்டின் அருகிலேயே புதைத்துவிட்டு ஏதும் நடக்காது போல் வெளியில் நடமாடியுள்ளார்.
இந்நிலையில் போலீஸார் விசாரணையின் போது சிக்கிக் கொண்ட வெங்கடேஷைக் கைது செய்த போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs