
சென்னை: சொத்து பிரச்சினைகளில் தலையிட்டு அடியாட்கள்போல செயல்படும் வழக்கறிஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் அனைத்து காவல் நிலையங்களுக்கும் டிஜிபி சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அடுத்த காரப்பாக்கத்தில் ரூ.103 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி கட்டிட உரிமை தொடர்பாக ஆர்.பி.சீனிவாசன் என்பவருக்கும், சுஷில் லால்வாணி, ஆர்த்தி லால்வாணி ஆகியோருக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இதுதொடர்பாக இரு தரப்பினரும் நீதிமன்றங்களில் பரஸ்பரம் வழக்கு தொடர்ந்துள்ளனர். சோழிங்கநல்லூர் நீதிமன்றத்தில் சுஷில் லால்வாணி, ஆர்த்தி லால்வாணி இடைக்கால தடை உத்தரவு பெற்றனர்.