
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் மலைப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில், தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டம் டான்மார்க் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.