• April 24, 2025
  • NewsEditor
  • 0

னிதனுக்குப் பல்வேறு நோய்கள் வர முக்கியக் காரணமே சுத்தமின்மைதான். எல்லாவற்றிலும் சுத்தம் பார்க்கும் நாம், கவனக்குறைவாக இருப்பது கழிப்பறை சுத்தத்தில்தான். ‘இதெல்லாம் பெரிய விஷயமா’ என்று அசட்டையாக விட்டதால்தான் அந்தக் காலத்தில் காலரா முதல் ஏராளமான கொள்ளைநோய்கள் ஏற்பட்டு, கொத்துக்கொத்தாக உயிரிழந்தனர்.

வளர்ந்த நாடுகளில் குழந்தைகளுக்கு கழிப்பறையை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைச் சொல்லித்தருகிறார்கள். நமது நாட்டில் ‘இதை எல்லாமா சொல்லித்தருவார்கள்’ எனக் கழிப்பறை சுத்தம் பற்றிப் பலரும் பேசத் தயங்குவதால், அங்கிருந்து கிருமிகள் பல்கிப் பெருகி, பல்வேறு நோய்களைப் பரப்புகின்றன.

நமது ஊரில் பொதுக் கழிப்பறையின் நிலை மிகவும் மோசமாக இருக்க, மக்களும் ஒரு காரணம். நம் வீட்டுக் கழிப்பறையாக இருந்தாலும், பள்ளி, கல்லூரி, அலுவலகம் மற்றும் பொது இடங்களில் இருக்கும் கழிப்பறையாக இருந்தாலும் சுத்தமாக வைத்துக்கொள்வது நம் ஒவ்வொருவரின் பொறுப்பு.

Toilet hygiene

* காற்று வெளியே செல்லும் அளவுக்குக் காற்றோட்டமான வென்டிலேட்டர் இருக்க வேண்டும்.

* கழிப்பறையில் பயன்படுத்திய நீர் வெளியேறும் வகையில், சிறப்பான கழிவு நீர் வழித்தடங்களை அமைக்க வேண்டும்.

* மலம், சிறுநீர் கழிக்கத் தனி அறையும், குளியலுக்குத் தனி அறையும் அமைப்பதுதான் நல்லது.

* ஒருவேளை இரண்டும் ஒரே அறையில் இருந்தால், கழிப்பறைக்கும் குளியலறைக்கும் இடையே ஒரு தடுப்புச் சுவர் அமைப்பது நல்லது.

* கழிப்பறைக்கு அருகில் சமையல் அறை அமைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

* கழிப்பறையில் ஒரு குப்பைத் தொட்டி வைக்க வேண்டும்.

குறைந்தபட்சம் மூன்று நாள்களுக்கு ஒரு முறையாவது 15 நிமிடங்கள் செலவுசெய்து கழிப்பறை முழுதையும் சுத்தம்செய்வது அவசியம். கழிப்பறையைச் சுத்தம் செய்வதற்காகக் கடையில் விற்கப்படும் பிரத்யேகத் திரவங்கள் அல்லது பிளீச்சிங் பவுடர்கள் பயன்படுத்தலாம். திரவமாக இருந்தாலும், பிளீச்சிங் பவுடராக இருந்தாலும், தண்ணீரில் கலந்து தெளித்து, பிரஷ் மூலம் தேய்த்துக் கழுவ வேண்டும். அதிக அளவு பிளீச்சிங் பவுடரைப் பயன்படுத்தினால், பாக்டீரியா அதை எதிர்கொள்ளும் சக்தியைப் பெற்றுவிடும். எனவே, ஒவ்வொரு வாரமும் இரண்டு முறை சீராகக் கழிப்பறையைச் சுத்தம் செய்துவந்தாலே போதுமானது.

Toilet hygiene
Toilet hygiene

இரண்டு கப் தண்ணீர், கால் கப் டெட்டால் சொல்யூஷன், ஒரு ஸ்பூன் யூகலிப்டஸ் எண்ணெய் மூன்றையும் சேர்த்து, நன்றாகக் கலக்கி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பிக்கொள்ளவும். வெஸ்டர்ன் கழிப்பறைகளில் அமரும் இடத்தில் இந்த ஸ்ப்ரேவை அடிக்க வேண்டும். பின்னர், சுத்தமான பருத்தித் துணியால் துடைத்துவிடலாம்.

* கை, கால்கள் மற்றும் சிறுநீர், மலம் கழித்த உறுப்புகளைத் தண்ணீரால் நன்றாகச் சுத்தம்செய்ய வேண்டும்.

* சோப் அல்லது கிருமிநாசினி பயன்படுத்தி, மீண்டும் ஒரு முறை விரல் இடுக்குகளைச் சுத்தம்செய்ய வேண்டும்.

* கழிப்பறையில் இருக்கும் டேப்பை, தண்ணீர் பயன்படுத்திச் சுத்தம் செய்ய வேண்டும்.

toilet hygiene
toilet hygiene

* கழிப்பறையை விட்டு வெளியே வரும் முன், கை,கால்களின் ஈரத்தைத் தூயப் பருத்தித் துணி அல்லது டிஷ்யூ பேப்பரால் நன்கு துடைக்க வேண்டும்.

* டிஷ்யூ பேப்பர்களைச் சரியாகக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.

நன்கு சுத்தமான கழிப்பறையில் ஒரு சதுர இன்ச் பரப்பில் குறைந்தது 50 பாக்டீரியா இருக்கிறதாம். சரியான பராமரிப்பு இல்லை என்றால் எவ்வளவு இருக்கும் என்று கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *