
சென்னையை சேர்ந்த இசைக் கலைஞர் கணேஷ் பி. குமார், ‘ரெய்ஸ்: சிம்பொனி நம்பர் 1 இன் டி மைனர்’ என்ற சிம்பொனி இசையை ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் வரும் 27-ம் தேதி அரங்கேற்றம் செய்கிறார். இந்த நிகழ்ச்சியை வியன்னாவைச் சேர்ந்த இசைக் கலைஞர் அந்தோணி ஆர்மோர் வழிநடத்துகிறார். புகழ்பெற்ற புடாபெஸ்ட் சிம்பொனி இசைக்குழு, இசையை நிகழ்த்தும். இதுகுறித்து கணேஷ் பி. குமார் கூறும்போது, “பீத்தோவனுக்கு சமர்ப்பணமாக 2018-ல் இந்த சிம்பொனி இசை இயற்றப்பட்டது. இந்த இசையை 2020-ல் அரங்கேற்றம் செய்ய திட்டமிட்டோம். கரோனா காரணமாக அது ஒத்தி வைக்கப்பட்டது. இப்போது வரும் 27-ம் தேதி அரங்கேற்றம் நடக்கிறது” என்றார்.