
நாங்கள் (தமிழ்)
அவினாஷ் பிரகாஷ் இயக்கத்தில் அப்துல் ரஃபே, மிதுன், ரிதிக், நிதின் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நாங்கள்’. ஊட்டியில் அம்மா விட்டுட்டுப் போக மூன்று ஆண் குழந்தைகளும் டாக்ஸிக்கான அப்பாவின் வளர்ப்பில் வளர்கின்றனர். அப்பாவின் டாக்ஸிக்கால் அவதிப்படும் குழந்தைகள் என்ன ஆனார்கள், தனது தவறை உணர்ந்தாரா அவர்களது அப்பா என்பதுதான் இதைக்களம். மாற்று சினிமாவாக யதார்த்தனமான கதைக்களத்துடன் பெற்றோரின் வளர்ப்புப் பற்றிய உளவியல் சிக்கல்களைப் பற்றிப் பேசும் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
டென் ஹவர்ஸ் (தமிழ்)

இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் சிபிராஜ், கஜராஜ், ‘ஆடுகளம்’ முருகதாஸ், ராஜ் அய்யப்பா, ஜீவா ரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டென் ஹவர்ஸ்’. சென்னையிலிருந்து கோவை செல்லும் டிராவல்ஸில் மர்மமான முறையில் கொலை ஒன்று நடக்கிறது. அந்தக் கொலையைச் செய்தது யார்? அந்தக் கொலையின் பின்னணியில் இருக்கும் மர்மங்கள் என்ன? என்ற ஆக்ஷன் திரில்லர் நிறைந்த போலீஸ் விசாரணைதான் இதன் கதைகளம்.
Arjun S/O Vyjayanthi (தெலுங்கு)
பிரதீப் சில்லுகுரி இயக்கத்தில் நந்தமுரி கல்யாண ராம், விஜயஷாந்தி, சொஹைல் கான், சாயி மஞ்சுரேக்கர், மேகா ஶ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Arjun S/O Vyjayanthi’. ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Odela 2 (தெலுங்கு இந்தி)

அசோக் தேஜா இயக்கத்தில் தமன்னா, ஹெபா பட்டேல், வஷிஷ்டா, முரளி ஷர்மா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Odela 2’. கடவுள் – தீய சக்திகள் என அமானுஷ்யங்கள் நிறைந்த திரில்லர் திரைப்படமான இது தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகியிருக்கிறது.
Kesari Chapter 2: The Untold Story of Jallianwala Bagh (இந்தி)

கரண் சிங் இயக்கத்தில் அக்ஷய் குமார், ஆர். மாதவன், அனன்யா பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Kesari Chapter 2: The Untold Story of Jallianwala Bagh’. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பிரிட்டிஷை எதிர்த்து நீதி கேட்டுப் போராடிய சங்கரன் நாயர் என்பவரின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Widow’s Shadow (இந்தி)

சுமன் ஆதிக்ரே இயக்கத்தில் சங்கலிட்டா ராய், பலக் கயத், பல்லவி பட், நந்திதா புரோகித், பிரத்விராஜ் தேசாய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Widow’s Shadow’. கணவனின் கொடுமையால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்தப் பெண், தன் வாழ்வை தனது பெண் தோழியுடன் புத்துயிர்ப்புப் பெறச் செய்து மகிழ்ச்சியாக வாழத்தொடங்குகிறார். இரு பெண்களிடையேயும் காதல் மலர, அந்தக் காதலுக்கு சமூகம் எப்படியெல்லாம் எதிர்ப்புத் தெரிவிக்கிறது என்பது பற்றியும், இரு பெண்களுக்கிடையேயான காதல், குடும்ப வன்முறைகள் பற்றியும் பேசும் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Vicky Donor (இந்தி)

ஷூஜித் சிர்கர் இயக்கத்தில் ஆயுஷ்மன் குரானா, யாமி கெளதம், அன்னு கபூர், கமலேஷ் கில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Vicky Donor’. விந்து தானம் பற்றிய காமெடி, கலாட்டா நிறைந்த இத்திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Sinners (ஆங்கிலம்)

ரயான் கூக்லர் இயக்கத்தில் மைக்கேல் பி. ஜோர்டன், ஹய்லி ஸ்டைன்பீல்ட், ஜாக், ஒமர் பென்சன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Sinners’. ஹாரர் திரில்லர் திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Paddington in Peru (ஆங்கிலம்)

டவுங்கல் வில்சன் இயக்கத்தில் பென் விஷா, ஹூக் பொனிவிலே, எமிலி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Paddington in Peru’. அட்வன்சர், காமெடி, அனிமேஷன் திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்களில் வெளியாகியிருக்கிறது.
இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்
Logout (இந்தி) – ZEE 5
Khauf (இந்தி) – Amazon Prime Video
The Last of us (ஆங்கிலம்) – Jio Hotstar
The Stolen Girl (ஆங்கிலம்) – Jio Hotstar

தியேட்டர் டு ஓடிடி
கிங்ஸ்டன் (தமிழ்) – ZEE 5
காதல் என்பது பொதுவுடமை (தமிழ்) – SUN Nxt
எமகாதகி (தமிழ்) – Aha
Vishnu Priya (கன்னடம்) – Amazon Prime Video
Mere Husband Ki Biwi (இந்தி) – Jio Hotstar
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
