
சிவகார்த்திகேயன் தற்போது ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். சுதா கொங்கரா இயக்கும் இந்தப் படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா, பாஸில் ஜோசஃப் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘மதராஸி’ திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு, வண்டலூர் பூங்காவில் 14 வயதான அனு என்ற வெள்ளைப் புலியைத் தத்தெடுத்து வளர்த்தார். அந்தப் புலியின் பராமரிப்புச் செலவுகளை ஆறு மாதங்களுக்குச் சிவகார்த்திகேயன் கவனித்து வந்தார்.
இதனைத் தொடர்ந்து, 2023-ம் ஆண்டு, செரு என்ற ஆண் சிங்கத்தைத் தத்தெடுத்து, அதன் பராமரிப்புச் செலவுகளை ஆறு மாதங்களுக்குக் கவனித்துக் கொண்டார்.
Actor Thiru. D. Sivakarthikeyan has adopted Lion Sheryar and Tiger Yuga at Vandalur Zoo for 3 months, supporting their care and maintenance.
You can also adopt an animal at #AAZP.Adopt now: https://t.co/7nlLnxu4Mw@Siva_Kartikeyan pic.twitter.com/WbKuLQegS5
— Vandalur Zoo @Arignar Anna Zoological Park Chennai (@VandalurZoo) April 19, 2025
தற்போது, வண்டலூர் உயிரியல் பூங்காவிலுள்ள ஒரு சிங்கத்தையும் ஒரு புலியையும் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார்.
ஷெர்யர் என்ற சிங்கத்தையும், யுகா என்ற புலியையும் அவர் தத்தெடுத்துள்ளார்.
இந்த சிங்கம் மற்றும் புலிக்கான பராமரிப்புச் செலவுகளை மூன்று மாதங்களுக்குச் சிவகார்த்திகேயன் கவனித்துக் கொள்ளவுள்ளார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…